ரேமா இலவச கிறிஸ்தவ புத்தகங்களை விநியோகிக்கும் ஒரு லாப நோக்கில்லா தொண்டு நிறுவனம்

ஒரு இலாப நோக்கில்லாத் தொண்டு நிறுவனமாக நாங்கள் என்ன செய்கிறோம், எங்கள் செயல்பாடுகளின் வரலாறு மற்றும் நீங்கள் எவ்வாறு பங்குபெறலாம் என்பதை அறியுங்கள்.


ரேமா இலக்கிய விநியோகிஸ்தர்கள் அதிஉன்னத தர கிறிஸ்தவ இலக்கியத்தைத் துடிப்பாக விநியோகிக்கும் ஒரே பணியில் ஈடுபட்டுள்ள பூமி முழுவதுமுள்ள விசுவாசிகளின் ஒரு குழுவாகும். 40க்கும் மேற்பட்ட நாடுகளில், 10க்கும் மேலான மொழிகளில் ஒரு எளிமையான கோட்பாட்டின்படி நாங்கள் விநியோகிக்கிறோம் - அதென்னவெனில், எங்கள் இலக்கியம் அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

வேதாகமத்தைப் புரிந்துகொள்ளவும், கிறிஸ்துவை அறிந்து எங்கள் அனுதின வாழ்வில் அனுபவமாக்குவதற்கும் எங்களுக்குப்  பெரிதும் உதவியாக இருந்த புத்தகங்களை நாங்கள் விநியோகித்துக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக, லிவிங் ஸ்ட்ரீம் மின்ஸ்ட்ரியின் ஆசிரியர்கள் எழுதிய பல முக்கியமான புத்தகங்களை விநியோகிப்பதற்கு அவர்களுடன் நாங்கள் நெருக்கமாகப் பணியாற்றுகிறோம்.

நாங்கள் ஒரு இலாப நோக்கில்லா அறக்கட்டளை, எங்கள் விநியோகம் உலகெங்குமுள்ள விசுவாசிகள் மற்றும் சபைகளின் நன்கொடைகளால் சாத்தியமாகிறது. தேவனை ஆழமாகவும் திருப்தியான விதத்திலும் அறியும்படி தேடும் எல்லாருக்கும் நிரப்பீடு தரும் இலவசமும், விசாலமுமான கால்வாயாக இருப்பதற்கான வழிவகையை அவர்கள் எங்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

எங்கள் விசுவாசம்

மக்கள் எங்கள் நம்பிக்கைகளைக் குறித்து அவ்வப்போது கேட்கின்றனர், இதோ, எங்கள் விசுவாச அறிக்கை. எங்கள் புத்தகங்களைப் பெற இந்த நம்பிக்கைகளைப் பின்பற்றுதல் நிபந்தனை அல்ல. எந்த நம்பிக்கை உள்ள எவருக்கும் எங்கள் புத்தகங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன.

ரேமாவில் உள்ள நாங்கள், விசுவாசிகள் யாவரும் பகிர்ந்துகொள்கிற பொதுவான விசுவாசத்தை, அதாவது புதிய ஏற்பாட்டில் ஒரு விசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறோம். குறிப்பாக, இந்தப் பொதுவான புதிய ஏற்பாட்டு விசுவாசம் வேதாகமம், தேவன், கிறிஸ்து, இரட்சிப்பு, நித்தியம் ஆகியவைகளைப் பற்றி நாங்கள் விசுவாசிக்கும் பின்வரும் காரியங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது:

  • வேதாகமமே முழுமையான தெய்வீக வெளிப்பாடு, அதன் ஒவ்வொரு வார்த்தையும் தேவனால் பரிசுத்த ஆவியின் மூலம் அருளப்பட்டிருக்கிறது.
  • தேவன் ஒப்பற்றவர், நித்தியமாக ஒருவர். இருப்பினும், அவர் ஒருவரிலிருந்து ஒருவர் வேறுபட்ட, ஆனால் பிரிந்திராத பிதா, குமாரன், ஆவி என்று நித்தியமாக மூவொருவராகவும் இருக்கிறார்.
  • இயேசு என்ற பெயருடைய ஒரு உண்மையான, நேர்த்தியான மனிதனாயிருக்கும்படி தேவன் கிறிஸ்துவில் மனித மாம்சமானார். அவர் சிலுவையில் அறையப்பட்டு, நம் மீட்பிற்காக பதிலீடாக மரித்தார். மூன்றாம் நாள் ஒரு மகிமையான சரீரத்தோடு உயிர்த்தெழுந்து மரணத்திலிருந்து எழுந்தார். அவர் தேவனின் வலதுபாரிசத்திற்கு ஏறிச்சென்று எல்லாருக்கும் ஆண்டவராக ஆக்கப்பட்டார்.
  • மனிதன் பாவம் செய்தான், பாவம் நிறைந்தவனாயிருக்கிறான், எனவே தேவனின் நியாயத்தீர்ப்பின் கீழ் விழுந்துவிட்டான். ஆனால் கிறிஸ்துவின் பதிலீடான மரணத்தின் மூலம், பாவம், தேவனின் நியாயத்தீர்ப்பு ஆகியவைகளிலிருந்து மனிதன் இரட்சிப்பைப் பெறுவதற்கான வழி திறக்கப்பட்டது. ஒரு நபர் தேவனிடமாய் மனம்திரும்பி, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிற்குள் விசுவாசிக்கும் போது, அவன் நித்திய இரட்சிப்பையும், பாவ மன்னிப்பையும், தேவனுக்கு முன்பாக நீதிப்படுத்தப்படுதலையும், தேவனோடு சமாதானத்தையும் கூட பெற்றுக்கொள்கிறான். இதன் அடிப்படையில், இரட்சிக்கப்பட்ட ஒரு நபர் தன்னை தேவனுடைய பிள்ளையாகவும், எல்லா விசுவாசிகளும் வளர்ந்து முதிர்ச்சிக்கென்று ஒன்றாகக் கட்டியெழுப்பப்படும் கிறிஸ்துவின் சரீரத்தின் அவயவமுமாகவும் ஆக்குகின்ற நித்திய ஜீவனையும் சுபாவத்தையும் பெறுகிறான்.
  • கிறிஸ்து தம் விசுவாசிகளைத் தம்மிடமாய்ப் பெற்றுக்கொள்ள இந்த பூமிக்கு மறுபடி வருகிறார். நித்தியத்தில் நாம் தேவனோடு, தேவனின் தெரிந்தெடுக்கப்பட்ட மக்களுக்கான அவருடைய இரட்சிப்பின் முழுநிறைவேற்றமாகிய புதிய எருசலேமில் வாழ்வோம்.

இந்தப் புதிய ஏற்பாட்டு விசுவாசத்தை வாசகர்கள் புரிந்துகொள்வதை, அனுபவிப்பதை உச்சநிலைக்குக் கொண்டுவருமென்று நாங்கள் நம்பும் கிறிஸ்தவப் படைப்புகளின் ஓர் ஒப்பற்ற தொகுப்பை இலவசமாக விநியோகிப்பதே ரேமாவில் எங்கள் குறிக்கோள். விசுவாசிகள் கிறிஸ்துவின் மீட்பின் மூலம் அவரில் ஒரு  நித்திய இரட்சிப்பை மட்டுமல்ல, வேதாகமத்திலிருந்து வரும் ஆவிக்குரிய உணவால் நடைமுறையில் உணர்ந்தறியப்படும், அவருடைய ஜீவனாலான, ஒரு அனுதின இரட்சிப்பையும் அனுபவித்துமகிழ்கிறார்கள். இது எங்கள் அனுபவமாயிருக்கிறது; இது உங்கள் அனுபவமாகவும் இருக்குமென்று நாங்கள் எதிர்நோக்குகிறோம்.

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்