பயன்பாட்டிற்கான நிபந்தனைகள்

ரேமா இலக்கிய விநியோகஸ்தர்கள் இணையதளத்திற்கு நல்வரவு.  இந்தத் தளத்தை பயன்படுத்துவதன் மூலம், பின்வரும் பயனர் நிபந்தனைகளுக்கு இணங்க நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள். இந்த நிபந்தனைகளைப்பற்றி உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், தொடர்பு பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள விலாசங்களில் எங்களைத் தொடர்புகொள்ள உங்களை வரவேற்கிறோம்.

உள்ளடக்கங்கள்
இந்த இணையதளத்தின் பக்கங்களில் உள்ளவைகள் உங்கள் பொது தகவலுக்கும் உபயோகத்திற்கும் மட்டுமே. எந்த அறிவிப்புமில்லாமல் இவை மாறுதலுக்குட்பட்டது. இந்த இணையதளத்தில் காணப்படும் அல்லது இதன்மூலம் வழங்கப்படும் தகவல் அல்லது பொருட்களின் குறிப்பிட்ட நோக்கத்திற்கான துல்லியம், உரியநேரத்தில் கிடைத்தல், அதன் செயல்பாடு, முழுமை, அல்லது பொருத்தம் ஆகியவைகளுக்கு, நாங்களோ வேறு எந்த மூன்றாம் நபர்களோ பொறுப்புறுதியோ, உத்திரவாதமோ அளிக்கவில்லை. அப்படிப்பட்ட தகவல் மற்றும் பொருட்களில் தவறுகள் அல்லது பிழைகள் இருக்கக்கூடும் என்பதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்கள், அதோடு நாங்கள் அப்படிப்பட்ட தவறுகள் அல்லது பிழைகளுக்கான பொறுப்பிலிருந்து சட்டம் அனுமதிக்கும் முழு அளவிற்கும் எங்களை வெளிப்படையாக இதன்மூலம் விடுவித்துக்கொள்கிறோம்.

வடிவமைப்பு
நாங்கள் இந்தத் தளத்தை 1024x768 கணினித்திரை காட்சிக்கு வடிவமைத்திருக்கிறோம். அதோடு, இந்தத் தளம் மற்ற உலாவிகளில் (பிரௌசர்) நன்றாக பணிபுரிந்தாலும், இந்த தளத்தின் செயல்பாட்டை மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8.0க்கு அதிஉகந்ததாக அமைத்திருக்கிறோம்.

ஆர்டர்களும் தனியுரிமையும்
தனியாக வழங்கப்பட்டுள்ள தனியுரிமை கொள்கையில் தனியுரிமை பற்றிய‌ முழு நிபந்தனைகளும் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. சுருக்கமாக, இலவச இலக்கியத்திற்கான விண்ணப்பங்களை நிறைவேற்றவும் அவை நல்ல ஒழுங்காக உங்களை வந்தடைகின்றன என்பதை உறுதிசெய்யவும் மட்டுமே உங்கள் தனிப்பட்ட தகவல் தேவை. கையிருப்பு மற்றும் சரியான விலாசம் ஆகியவையின் அடிப்படையில் மட்டுமே ஆர்டர்கள் நிறைவற்றப்படுகின்றன. சில வேளைகளில், செலவினம், சட்ட தடைகள், சர்வதேச பிரச்சனைகள், சுங்கம் சம்பந்தமான சட்டம், மற்றும் வேறு காரணிகளால் சில குறிப்பிட்ட இடங்களுக்கு ஆர்டர்கள் நிறைவேற்றப்பட முடியாது. இந்தக் காரணிகள் எந்த அறிவிப்புமில்லாமல் மாறுதலுக்குட்பட்டது.

காப்புரிமை
இந்த இணையதளத்தில் ரேமா இலக்கிய விநியோகஸ்தர்களுக்குச் சொந்தமான அல்லது உரிமை வழங்கப்பட்டுள்ள சாதனங்கள் இருக்கின்றன. இந்தச் சாதனங்களில் உருவடிவம், வடிவமைப்பு, தோற்றம், முகப்பு, சின்னம் உட்பட வரைகலை (கிராபிக்ஸ்), உரை, மற்றும் பாராட்டுரைகள் ஆகியவையும் இவைதவிர மற்றவையும் அடங்கும். நியாய பயன்பாட்டிற்கான சலுகைகளுக்கு அப்பாற்பட்ட அனைத்துவித மறுஉற்பத்தியும் தடைசெய்யப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் இந்த இணையதளத்தைப் பயன்படுத்துதல் சேதஇழப்பீடு கோருதலுக்கு அல்லது குற்றவியல் குற்றத்திற்கு அல்லது இரண்டிற்கும் ஏதுவாகும்.

பொறுப்பு
இந்த இணையதளத்தில் உள்ள எந்தத் தகவல் மற்றும் சாதனங்களை நீங்கள் பயன்படுத்துவதில் உள்ள இலாப நஷ்டம் யாவையும் உங்களைச் சார்ந்தது, இதற்கு ரேமா இலக்கிய விநியோகஸ்தர்கள் பொறுப்பு இல்லை. இந்த இணையதளத்தின் மூலம் கிடைக்கும் எந்தப் பொருள், சேவை, அல்லது தகவல் உங்கள் குறிப்பிட்ட தேவைகளுக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்துகொள்ளும் பொறுப்பு உங்களைச் சார்ந்தது. மற்ற இணையதளங்களுக்கான இணைப்புகளை சில நேரங்களில் இந்த இணையதளம் உள்ளடக்கக்கூடும். அதிகப்படியான தகவல் வழங்க உங்கள் வசதிக்காக இந்த இணைப்புகள் தரப்படுகின்றன. இணைக்கப்படும் இணையதளத்தின் அல்லது இணையதளங்களின் உள்ளடக்கங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல. நீங்கள் இந்த இணையதளத்தை பயன்படுத்துதலும் அவ்வாறு பயன்படுத்துதலின் விளைவாக வரக்கூடிய எல்லா சர்ச்சைகளும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் வாஷிங்டன் மாநில சட்டங்களுக்கு உட்பட்டது.