தனியுரிமை கொள்கை

இந்த இணையதளத்தை நீங்கள் பயன்படுத்துகையில் நீங்கள் வழங்கும் எந்தவொரு தகவலையும் ரேமா இலக்கிய விநியோகஸ்தர்கள் எவ்வாறு பயன்படுத்துவார்கள், பாதுகாப்பார்கள் என்பதை இந்தத் தனியுரிமை கொள்கை விளக்குகிறது. அத்தகைய மாற்றங்கள் உங்களுக்கு திருப்தியளிக்கின்றனவா என்பதை உறுதி செய்துகொள்ளும்படி நீங்கள் இந்தப் பக்கத்தை அடிக்கடி சரிபார்க்கும்படியாக,  இந்தக் கொள்கை மாறுதலுக்குட்பட்டது என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள். ஜனவரி 1, 2011லிருந்து இந்தக் கொள்கை அமலுக்கு வருகிறது.

நாங்கள் சேகரிக்கும் தகவல்
நீங்கள் இந்த இணையதளத்தைப் பயன்படுத்துவதை மேம்படுத்தவும் இலவச புத்தகங்களுக்கான ஆர்டர்களை நிறைவேற்றவும், பின்வரும் தகவல்கள் சேகரிக்கப்படலாம்: மொழி விருப்பம், பெயர், நாட்டின் பெயர் உட்பட தபால் விலாசம், மற்றும் உபயோகத்திலுள்ள ஒரு மின்னஞ்சல்.

நாங்கள் எவ்வாறு பாதுகாக்கிறோம்
உங்கள் தகவல் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். நாங்கள் இணையதளத்தில் சேகரிக்கும் தகவலைப் பாதுகாக்க பௌதீக, மின்னணு மற்றும் மேலாண்மை நெறிமுறைகளை அமல்படுத்தியுள்ளோம். பொருத்தமான சட்டம் கோரினால் தவிர, உங்கள் தனிப்பட்ட தகவலை எந்தச் சூழ்நிலையிலும் மூன்றாம் நபர்களுக்கு விற்கவோ, விநியோகிக்கவோ, குத்தகைக்குத் தரவோ மாட்டோம்.

நீங்கள் எவ்வாறு பங்குபெறலாம்
உங்களைப் பற்றி நாங்கள் பராமரிக்கிற தனிப்பட்ட தகவலின் விவரங்களை நீங்கள் கேட்டுப்பெறலாம். ஏதேனும் தகவல் தவறானது என்றோ உங்கள் உடன்பாடு இல்லாமல் சமர்ப்பிக்கப்பட்டது என்றோ நீங்கள் நினைத்தால், இந்தப் பிரச்சனையை சரி செய்ய எங்களைத் தொடர்புகொள்ளுங்கள். முன்னர் நீங்கள் ஏதேனும் ஆர்டருக்காக உங்கள் தகவலை சமர்ப்பித்திருந்தால், பின்னர் அதனை எங்கள் பதிவேடுகளிலிருந்து நீக்கிவிடும்படி நீங்கள் கேட்டுக்கொள்ளலாம்.

கணினி நினைவிகளை (குக்கீஸ்) எவ்வாறு பயன்படுத்துகிறோம்
ஒரு கணினி நினைவி (குக்கீ) என்பது ஒரு குறிப்பிட்ட இணையதளத்தைப் பற்றிய விருப்புகளை நினைவில் வைத்துக்கொள்ள இணையதளங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு சிறு கோப்பு. உங்கள் மொழி தேர்வுகளை பதிவு செய்துகொள்ள மட்டுமே நாங்கள் கணினி நினைவிகளைப் பயன்படுத்துகிறோம். உங்களைத் தனிப்பட்ட விதத்தில் அடையாளம் காண்பதற்கான எதனையும் இந்த நினைவி சேமிக்காது.

இந்தக் கொள்கை எங்கே பொருந்தும்
எங்கள் இணையதளத்தில் மற்ற தளங்களுக்கான இணைப்புகள் இருக்கக்கூடும். இந்த இணைப்புகளை நீங்கள் தெரிந்தெடுத்தால், நீங்கள் இந்த தளத்தை விட்டு வெளியேறி எங்கள் தனியுரிமை கொள்கையை விட்டு வெளியறுவீர்கள். அந்தந்த இணையத்தளத்திற்குப் பொருந்தும்  தனியுரிமை கொள்கையை சரிபார்க்க நீங்கள் கவனமாக இருக்கவேண்டும்.