தேவன், மனிதன், மற்றும் பூமியில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பவை குறித்த கேள்விகள்

உலகளாவிய விதத்தில் தொற்றுநோய் பரவிவரும் இந்த நாட்களில், தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார்? நான் என்ன செய்ய வேண்டும்? இந்தக் காரியங்கள் ஏன் நடைபெறுகின்றன? எதிர்காலத்தில் என்ன நிகழும்? போன்ற ஆவிக்குரிய பரிசீலனைகள் மற்றும் கேள்விகள் குறித்து வேதாகமத்திலிருந்து சில ஆழ்ந்த உட்பார்வையை கீழே பகிர்ந்துகொள்ள விரும்புகிறோம். முன்னெப்போதும் சந்தித்திராத இந்தச் சூழ்நிலையின் மத்தியில் நீங்களும் உங்கள் அன்புக்குரியவர்களும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறிந்துகொள்வதற்கான உங்கள தேடுதலில் இவை உங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

கட்டுரைகள்

பிரச்சினை மற்றும் கடுந்துயரிலிருந்து விடுவிக்கப்பட கர்த்தருடைய பெயரைக் கூப்பிடுதல்

பிரச்சினை மற்றும் கடுந்துயரிலிருந்து விடுவிக்கப்பட கர்த்தருடைய பெயரைக் கூப்பிடுதல்

பிரச்சினையான அல்லது கடுந்துயரான சூழ்நிலைகளில், மக்கள் பெரும்பாலும் குழப்பமடைகிறார்கள் அல்லது என்ன செய்வதென்று தெரியாமல் திகைக்கிறார்கள். இதுபோன்ற நேரங்களில் பலர் ஜெபிக்க நாடுகிறார்கள், ஆனால் நாம் எதற்காக ஜெபிப்பது அல்லது எப்படி ஜெபிப்பது? பைபிளில் குறிப்பிட்டுள்ளபடி கர்த்தருடைய பெயரைக் கூப்பிடுவதே மிக எளிமையான மற்றும் உதவிகரமான வழியாகும் (ரோ. 10:13). கூப்பிடுதல் என்பது ஒரு குறிப்பிட்ட வகையான ஜெபம்; இது வெறும் ஒரு வேண்டுகோள் அல்லது தொடர்பு கொள்ளுதல் அல்ல, மாறாக நம்மை பலப்படுத்தி, நம் ஆவிக்குரிய பெலனைப் பராமரிக்கிற, ஆவிக்குரிய சுவாசப்பயிற்சியாகும்.

சமாதானமும் பாதுகாப்பும்

சமாதானமும் பாதுகாப்பும்

மனித சமுதாயம் நமக்கு சமாதானத்தையும் பாதுகாப்பையும் வழங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. சமாதானமும் பாதுகாப்பும் இல்லையெனில், நம் வாழ்க்கை பயத்திலும் சந்தேகத்திலுமே கழிந்து கொண்டிருக்கும். நமது அரசாங்கம் நம் பாதுகாப்பை உறுதிசெய்ய கடமைப்பட்டுள்ளது; நமது மருத்துவமனைகளும், மருந்தகங்களும் நம் ஆரோக்கியத்தையும், உடல் நலனையும் பேணும்படி நாடுகின்றன; நமது வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நம் சேமிப்புகளுக்கும், முதலீடுகளுக்கும் பாதுகாப்பை வாக்குறுதியளிக்கின்றன. ஆனால் இறுதியில், நமது நிதி நிறுவனங்களாலும், நமது அரசாங்கத்தாலும், நமது சுகாதார அமைப்பாலும், நாம் சார்ந்திருக்கிற மற்ற பல காரியங்களாலும் நமக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பாதுகாப்பை உண்மையில் நாம் எந்தளவுக்குச் சார்ந்து கொள்ள முடியும்?

என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்

என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்

கர்த்தராகிய இயேசு பூமியில் இருந்தபோது, அவர் அழைப்புவிடுக்கும் இந்த வார்த்தைகளை அடிக்கடி பேசினார்: என்னிடம் வாருங்கள். "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்.  11:28). "சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்...தேவனுடைய இராஜ்ஜியம் அப்படிப்பட்டவர்களுடையது." (மாற். 10:14) "ஒருவன் தாகமாயிருந்தால், என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்" (யோவா. 7:37). இளைப்பாறுதலுக்காகவும் ஜீவனுக்காகவும் தம்மிடம் வருமாறு கர்த்தர் நம்மை எப்பொழுதும் அழைத்துக்கொண்டே இருக்கிறார்.

இந்த உலகம் எப்போது முடிவடையும்?

இந்த உலகம் எப்போது முடிவடையும்?

எப்போதெல்லாம் ஓர் உலகளாவிய தொற்றுநோய், பூகம்பம், சூறாவளி, புயல், வெள்ளம் போன்ற இயற்கைப் பேரழிவு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் உலகம் எப்போது முடிவடையும் என்று மக்கள் வியக்கின்றனர். இது ஒரு முக்கியமான கேள்வி, இதைப் புறக்கணிக்க முடியாது. சிலர் மரிக்க பயப்படுவதால் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். மற்றவர்கள் நியாயத்தீர்ப்பு நாளைப் பற்றி பயப்படுகிறார்கள், இன்னும் சிலர், நாம் இருக்கும் இந்த அசிங்கமான குழப்பத்தை தேவன் விரைவில் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றும், மனிதன் நிம்மதியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழும்படி அவருடைய அன்பு மற்றும் நீதியின் இராஜ்ஜியத்தை அவர் கொண்டு வரவேண்டும் என்றும் எதிர்நோக்குகிறார்கள்.


மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்