வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ உங்களுக்குத் தேவைப்படும் ஏழு அத்தியாவசிய அனுபவங்கள்

வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ உங்களுக்குத் தேவைப்படும் ஏழு அத்தியாவசிய அனுபவங்கள்

நாம் ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ உதவும் எங்கள் இலவச கிறிஸ்தவ புத்தகங்களின் தொடரில் காணப்படும் 7 அத்தியாவசிய அனுபவங்கள் இங்கே உள்ளன. இந்த பட்டியல் முழுமையானது அல்ல, ஆனால் நீங்கள் கொண்டிருக்க வேண்டிய சில முக்கிய கிறிஸ்தவ அனுபவங்களைக் காட்டுகிறது. கிறிஸ்து சாத்தான்மீது சிலுவையில் வெற்றி பெற்றார், கிறிஸ்துவின் வெற்றியைப் பராமரிப்பதே நாம் வெற்றிகரமாக இருப்பதற்கான வழி. எங்கள் புத்தகத் தொடர், நம் அன்றாட வாழ்க்கையில் கிறிஸ்துவின் வெற்றியை பராமரிக்க உதவும் பல தலைப்புகளை அலசுகிறது.

  1. நாம் தேவனின் குறிக்கோளை அறிந்து அதற்கேற்ற ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும், அப்போது வெற்றிகரமாக இருக்கும் ஓர் உணர்வு நம்மிடம் இருக்கும். எங்கள் புத்தகத் தொடரானது வேதத்திலுள்ள தேவனுடைய குறிக்கோளையும், அவரது குறிக்கோளின்படி நாம் வாழக்கூடிய நடைமுறை வழிகளையும் வெளிப்படுத்துகிறது.
  2. கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் நாம் ஜெயங்கொள்கிறோம். இது, எங்கள் புத்தகத் தொடர் முழுவதும் கூறப்பட்டுள்ளது, முதலில் கிறிஸ்தவ வாழ்வின் அடிப்படை மூலக்கூறுகள், திரட்டு 1-ல் "கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தம்" பற்றிய மூன்றாவது அதிகாரத்திலும், பின்பு சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்துவிலும், இறுதியாக மகிமையான சபையிலும் உள்ளது.

    ஆட்டுக்குட்டியின் இரத்தத்தால் அவர்கள் அவனை ஜெயித்தார்கள்... வெளி. 12:11

  1. நாம் விசுவாசம் நிறைந்தவர்களாக இருக்குமாறு, கிறிஸ்துவைப் பற்றிய ஆழமான அறிவையும் அனுபவத்தையும் நாம் பெற்றிருக்க வேண்டும்.

    யோசுவா காலேப் ஆகிய இருவரின் எடுத்துக்காட்டை நாம் பின்பற்றுவோம். விசுவாசம் நிறைந்த இருதயம் அவர்களிடம் இருந்தது. “நாம் உடனே போய் அதைச் சுதந்தரித்துக்கொள்வோம்; நாம் அதை எளிதாய் மேற்கொள்ளலாம்" என்று அவர்களால் மக்களிடம் கூற முடிந்தது (எண். 13:30). -  சகலத்தையும்-உள்ளடக்கிய கிறிஸ்து, அதி. 13

  1. ஒரு வெற்றிகரமான வாழ்க்கை மறுபடிஜெநிப்பிக்கப்படுதலில் நாம் பெற்றுக்கொண்டவற்றை அடிப்படையாகக் கொண்டது. மறுபடிஜெநிப்பிக்கப்படுதல் மூலம், நாம் வளர்ந்து, முதிர்ச்சியடைந்து, ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் நாம் பெற்றிருக்கிறோம்.

    மறுபடிஜெநிப்பிக்கப்படுதல் மூலம் ஒரு புதிய இருதயத்தையும் ஒரு புதிய ஆவியையும் நாம் பெறுகிறோம். மறுபடிஜெநிப்பிக்கப்படுதல் மூலம் பரிசுத்த ஆவியையும் கிறிஸ்துவையும் தேவனையும் நாம் மேலும் பெறுகிறோம். நம்மைப் பரிசுத்தமாக்குவதற்கும் ஆவிக்குரியவர்களாக்குவதற்கும் மற்றும் நம்மை வெற்றிகரமாக்குவதற்கும் வரம்புகடந்தவர்களாக்குவதற்கும் மற்றும் நாம் ஜீவனில் வளர்வதற்கும் முதிர்ச்சியடைவதற்கும் இவைகள் உண்மையாகவே நமக்குப் போதுமானவைகளாக இருக்கின்றன. - ஜீவனின் அறிவு, அதி. 4

  1. ஒரு வெற்றிகரமான வாழ்க்கை வாழ எப்படி நம் மனித ஆவிக்கு திரும்புவது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.

    உங்களால் ஒரு கஷ்டமான சூழ்நிலையைச் சகிக்கமுடியாதபோதும், உங்கள் பலத்திற்கு மிஞ்சி ஒடுக்கப்படும்போதும், உங்கள் ஆவிக்குத் திரும்பி இயேசுவை நோக்கிப் பாருங்கள். அதற்கும்மேல் உயரமாக, எல்லாவற்றையும் கடந்தவனாகவும், வெற்றிபெற்றவனாகவும், எழும்புவாய். எல்லாமே உங்கள் பாதத்துக்குக்கீழே இருக்கும். - தேவனுடைய பொருளாட்சி, அதி. 11

  1. நம் மனதை ஆவியின்மீது பொருத்துவதை நாம் நினைவில் கொள்ள வேண்டும், இதுவே வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கான நடைமுறைக்குரிய வழி. நம் ஆத்துமாவின் முக்கிய பகுதி நம் மனம், இது நம் வாழ்க்கையை இயக்குகிறது–நம் மனம் பொருத்தப்பட்டிருக்கும் இடமே நம் வாழ்வை தீர்மானிக்கிறது.

    மாம்சத்தின்மீது பொருத்தப்பட்ட மனம் மரணம்; ஆவியின்மீது பொருத்தப்பட்ட மனமோ ஜீவனும் சமாதானமுமாம் (கிரே.). ரோ. 8:6

    நாம் யோவான் 3:16-ஐ மட்டும் நினைவில் வைத்திருந்து, ரோமர் 8:6-ஐ மறந்துவிட்டால், நாம் தரித்திரமாக இரட்சிக்கப்பட்ட ஒரு கிறிஸ்தவன்; நம்மால் ஒருபோதும் ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவனாக இருக்க முடியாது. நித்திய ஜீவனைப் பெற யோவான் 3:16 போதுமானது, ஆனால் ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை ரோமர் 8:6 சுட்டிக்காட்டுகிறது. - தேவனுடைய பொருளாட்சி, அதி. 17

  1. நாம் தேவனின் குறிக்கோளில் உள்ள சபையைப் பற்றியும் சபையின் பங்கைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். வெற்றி என்பது வெறுமனே ஒரு தனிப்பட்ட காரியம் மட்டுமல்ல; இறுதியாக இது சபையால் நிறைவேற்றப்படுகிறது. இதைப் பார்ப்பது நம்மை இந்த அனுபவத்திற்குள் வழிநடத்தும்.

    ஒரு வெற்றிகரமான கிறிஸ்து கூட்டல் ஒரு வெற்றிகரமான சபையை, அதாவது, பிசாசின் வேலையை ஜெயங்கொண்ட ஒரு கிறிஸ்து கூட்டல் பிசாசின் வேலையைக் கவிழ்த்துப்போட்ட ஒரு சபையைப் பெறவேண்டும் என்பதே அவரது குறிக்கோள். - மகிமையான சபை, அதி. 2

முடிவாக, விசுவாசத்தில் நாளை என்பதே இல்லை; எப்போதும் “இன்றைய தினமே” உண்டு. ஒரு வெற்றிகரமான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வது இன்றைய தினத்தைப் பற்றியது, எனவே நீங்கள் இன்றைய தினம் என்ன செய்யப் போகிறீர்கள்? நீங்கள் இந்தப் புத்தகத் தொடரை பெற எங்களை தொடர்பு கொள்ளவும், வாசிக்க ஆரம்பிக்கவும் அறிவுறுத்துகிறோம். https://www.rhemabooks.org/ta/order-free-books/


மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்