எங்கள் விநியோக நடவடிக்கைகளில் எவ்வாறு நீங்கள் எவ்வாறு பங்கெடுப்பது என்று அறியுங்கள்.

நீங்கள் பங்கெடுக்கக்கூடிய மூன்று வழிகள் உள்ளன. முதிலில் உங்கள் ஜெபத்தின்மூலம், இரண்டாவது நன்கொடையின்மூலம், மூன்றாவது, உங்கள் பகுதியில் இலவச இலக்கிய வநியோகத்தில் பங்கெடுப்பதின்மூலம்.

ஜெபிப்பதின்மூலம் பங்கெடுங்கள்

பலர் தங்கள் பகுதியிலும், உலகத்தின் பல்வேறு இடங்களிலும் விநியோகத்தில் பங்கெடுத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் விவரங்கள் பெறுவதற்கான இந்த விண்ணப்பங்களை நாங்கள் பாராட்டுவதோடு, எங்களோடு இணைந்துகொள்வதற்கான வழிகளை விவரிக்க இந்தப் பகுதியை நாங்கள் பயன்படுத்துகிறோம். இந்தப் பகுதியை பங்கெடுப்பதற்கான வழிகளுக்கேற்ப மூன்று பிரிவுகளாக நாங்கள் பிரித்திருக்கிறோம் : ஜெபம், நன்கொடை, விநியோகம்.

பங்கெடுப்பதற்கான முதலும் பிரதனமுமான வழி ஜெபம். பல்வேறு மொழிகள் மற்றும் நாடுகளில் இலவசப் புத்தகங்களை நாங்கள் விநியோகிக்கையில் ஒன்று தீமோத்தேயு அதிகாரம் 2இல் காணப்படும் மனிதனின் இரட்சிப்புக்கான குறிப்பிட்ட ஜெபத்தால் நாங்கள் கவரப்பட்டிருக்கிறோம்.

நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்; நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தொடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும். நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையையும் பிரியமுமாயிருக்கிறது. எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 1 தீமோ. 2:1-4

இங்கு நாம் பின்வருபவற்றைக் கவனிக்கவேண்டும்:

  • எல்லா மனுஷருக்கான விண்ணப்பங்கள், ஜெபங்கள், வேண்டுதல்கள், ஸ்தோத்திரங்கள் ஆகியவைகளை உள்ளடக்கிய பன்முனை ஜெபம்.
  • ஜெபம், ராஜாக்கள் மற்றும் அதிகாரமுள்ள யாவரும் உட்பட, எல்லா மனுஷருக்காகவும் ஏறெடுக்கப்படுகிறது. நாம் இன்றைய உலக சூழ்நிலையைப் பார்க்கும்பொழுது, தேவனுடைய வாஞ்சை நிறைவேற முன்னெப்போதையும்விட  இப்போது இது முக்கியமானது.
  • தேவனுடைய விருப்பம் இரண்டு பகுதியாலானது: எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படுவதும், அதோடு சத்தியத்தின் முழு அறிவிற்கு வருவதும் ஆகும். ஜெபத்தில் நாம் பங்கெடுப்பதும் இந்த வாஞ்சையை பிரதிபலிக்கவேண்டும்.
  • இந்த ஜெபம் மிகவும் குறிப்பானதும் ஒரு இலக்கை நோக்கியதுமாகும், ஏனென்றால் இது கலகமில்லாத அமைதலுள்ள ஒரு வாழ்க்கையின் தேவையைக்கூட குறிப்பிடுகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் மனிதரை இரட்சிக்கவும் அவர்களை சத்தியத்தின் முழு அறிவிற்குக் கொண்டுவரவும் தேவனுக்கு ஒரு வழி இருக்கிறது.

இப்படிப்பட்ட ஒரு ஜெபத்தில் ஒருகூட்ட தேவமக்கள் ஈடுபடும்போது,  சில வருடங்களில் இந்தக் குறிப்புகள் அனைத்தும் நிறைவேறுமென்று எங்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறோம். சத்தியத்தின் முழு அறிவை இந்தப் புத்தகங்கள் இலவசமாக பரப்புகின்ற இந்த வேளையில் அநேகர் இவ்விதமாக ஜெபிக்கக்கூடுமென்று நாங்கள் உண்மையாக நம்புகிறோம்.

ரேமா 1982இல்  நிறுவப்பட்ட  ஒரு இலாபநோக்கில்லா நிறுவனம், இது அமெரிக்க ஐக்கிய நாடுகளின் வாஷிங்டன் மாநிலத்திலுள்ளது. யு.எஸ். உள்நாட்டு வருவாய் சட்டம், பிரிவு 501 (c)(3)இன்படி, ரேமாவுக்கான நன்கொடைகள் வரி கழிவுக்கு தகுதியானது. ரேமாவின் நிதியை நிர்வாகிக்கும் ஒரு சுயாதீனமான நிர்வாகிகள் குழு இருக்கின்றது. கிறிஸ்தவ இலக்கிய விநியோகத்தில் ஈடுபட்டுள்ள ரேமாவின் அலுவலகங்கள் உலகெங்கும் 10 நாடுகளில் செயல்பட்டுவருகின்றன.

எல்லா நன்கொடைகளும் வரவேற்கப்படுகின்றன, அவை யாவும் வேதாகமங்கள் மற்றும் கிறிஸ்தவ இலக்கிய விநியோகத்திற்காகவும், வேதாகமத்திலடங்கியுள்ள சத்தியங்களைப் புரிந்துகொள்ள, அனுபவிக்க வாசகர்களுக்கு உதவும் மாநாடுகள், கருத்தரங்குகள் போன்ற விநியோகத்துடன்  தொடர்புடைய செயல்பாடுகளுக்காகவும் பயன்படுத்தப்படும்.

உங்கள் தனிப்பட்ட விவரங்கள் வியாபார நோக்கங்களுக்காக வெளியிடப்படாது, மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளப்படாது.

கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிய விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும்.
லூக்கா 6:38

ரேமாவுக்கு கொடுக்கும்படி ஆண்டவரால் பாரப்படுத்தப்படுகிறவர்கள் பின்வரும் வழிகளில் அன்பளிப்பு கொடுக்கலாம்:

தன்னார்வத் தொண்டாற்றுவதன்மூலம் பங்கெடுங்கள்

ஆகையால், நீங்கள்...போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே... ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும்...கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும்...உங்களுடனேகூட இருக்கிறேன். மத்தேயு 28:19-20

பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள். அப்.1:8

பூமியின் பல்வேறு இடங்களில் இந்த இலவச இலக்கிய விநியோகத்தில் பங்குபெற விரும்புபவர்கள், தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும்.

தொடர்பு கொள்ள

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்