ரேமா இலக்கிய விநியோகஸ்தர்களின் 30+ ஆண்டு வரலாறு

நாங்கள் எவ்வாறு ஆரம்பித்தோம் என்று அறியுங்கள், அதோடு உலக அளவிலான எங்கள் விநியோக முயற்சிகளை எவ்வாறு விரிவாக்கினோம் என்பதைப்பற்றி வாசியுங்கள்.

1980களின்  மத்தியிலிருந்து, ரேமா இலவச இலக்கிய விநியோகத்தைச் செயல்படுத்திக்கொண்டிருக்கிறது. முதலில் நாங்கள் முன்னாள் சோவியத் ஐக்கிய நாடுகளுக்கு ரஷ்ய மொழியில் வேதாகமங்களையும் ஆவிக்குரிய புத்தகங்களையும் விநியோகிக்க ஆரம்பித்தோம். புத்தகங்களை வேண்டுகிற ஒவ்வொருக்கும் தபால் மூலம் அவற்றை அனுப்புவதே இந்த விநியோகத்திற்கான எங்கள் பிரதான வழியாக இருந்தது, ஆனால் அதோடு, தேவனின் வார்த்தையைப் பல இடங்களுக்குப் பரப்ப மற்ற குழுக்களுடனும் நாங்கள் ஒத்துழைத்தோம்.

1999இல் ரஷ்ய மொழிக்கான இந்த முயற்சி, விரிவான அடிக்குறிப்புகளும் ஆய்வுக் குறிப்புகளும் அடங்கிய ஒரு ரஷ்ய புதிய ஏற்பாட்டின் திரள் விநியோகத்தில் தன் உச்சத்தை எட்டியது.

2001இல் மற்ற மொழிகளிலும் நாடுகளிலும் இலவச ஆவிக்குரிய இலக்கியத்தின் தேவையை ரேமா பரிசீலிக்க ஆரம்பித்தது, இது இந்த பூமியின் மற்ற பிரதான பகுதிகளுக்குப் படிப்படியான விரிவாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் அணியாக, கூடுதலாக பத்து மொழிகளை இணைத்து, விநியோகத்திற்கான புத்தகத் தொகுப்பையும் நிர்ணயித்தோம்.

2006இல் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மொழிகள் உட்பட, பல்வேறு மொழிகளுக்கான திட்டங்களை ரேமா ஏற்படுத்தியது.

கடந்த 20 ஆண்டுகளில், கிறிஸ்தவ இலக்கியத்தின் இலட்சக்கணக்கானப் பிரதிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன - அனைத்தும் இலவசமாக.

மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள்